விவசாயிகளின் குடும்பத்தினர் கல்விக்காக சம்பளத்தை வழங்குகிறார் ஹர்பஜன் சிங் எம்.பி!

விவசாயிகளின் குடும்பத்தினர் கல்விக்காக சம்பளத்தை வழங்குகிறார் ஹர்பஜன் சிங் எம்.பி!

பஞ்சாப் ஏழை விவசாயிகளுடைய மகள்களின் கல்விச் செலவிற்கு தனது சம்பளத்தை வழங்க மாநிலங்களவை உறுப்பினர் ஹர்பஜன் சிங் முடிவு செய்துள்ளார்.

கடந்த மாதம் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல சுழல் பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங் மாநிலங்களை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் தனக்கு மாநிலங்களவை உறுப்பினருக்காக வழங்கப்படும் சம்பளத்தை பஞ்சாப் ஏழை விவசாயிகளுடைய மகள்களின் கல்விச் செலவிற்கு வழங்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், “ நாட்டின் முன்னேற்றத்திற்காக என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in