கன்னியாகுமரியில் கால்பந்து போட்டி நடத்தும் காவல்துறை: காரணம் தெரியுமா?

கன்னியாகுமரியில் கால்பந்து போட்டி நடத்தும் காவல்துறை: காரணம் தெரியுமா?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கால்பந்து அணிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டியை நடத்துகிறது குமரி மாவட்ட காவல்துறை. கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் இடையே போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஊட்டும் வகையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும்வகையிலும், இளைஞர்கள் போதைப் பொருட்கள் போன்று தவறான பாதைக்குச் செல்லாமல் அவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாவட்டக் காவல்துறையின் புதிய முயற்சியாக கால்பந்துப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கால்பந்து அணிகள் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்துகொண்டு வெல்லும் அணிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கால்பந்து அணிகள் தங்கள் விபரங்களை 9498103903 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யலாம். போட்டி சம்பந்தமாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இந்தப் போட்டியின் ஒருங்கிணைப்பாளரும், குளச்சல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளருமான தங்கராமனை 9498216797 என்ற எண்ணில் பேசலாம். ஒவ்வொரு அணிக்கும் ஆறு வீரர்கள் கலந்து கொள்ளலாம். டிச. 22-ம் தேதிக்குள் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வாட்ஸ் அப் மூலம் தங்கள் பெயரைப் பதிவு செய்ய வேண்டும் ”என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in