வாட்ஸ் அப் மூலம் ஆர்டர் செய்தால் போதும்; ரயில் பயணிகளைத் தேடி வருகிறது உணவு: ஐஆர்சிடிசி அசத்தல்

வாட்ஸ் அப் மூலம் ஆர்டர் செய்தால் போதும்; ரயில் பயணிகளைத் தேடி வருகிறது உணவு: ஐஆர்சிடிசி அசத்தல்

வாட்ஸ்அப் செயலி மூலம் ரயில் பயணிகள் தங்களுக்கு விருப்பமான உணவை ஆர்டர் செய்யும் வசதியை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) அறிமுகம் செய்துள்ளது.

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது பயணச்சீட்டில் உள்ள பிஎன்ஆர் எண்ணைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் செயலி உணவுகளை வசதியைப் பெற முடியும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனை ஐஆர்சிடிசி மற்றும் ஜியோ ஹாப்டிக் ஆகியவை இணைந்து செயல்படுத்த உள்ளது. வாட்ஸ்அப் சேட்டில் இருந்தபடியே பயணிகள் 'Zoop' செயலியில் உணவு ஆர்டர் செய்ய முடியும். ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்ய பிரத்தியேகமாகச் செயலி ஏதும் பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. இந்த வாட்ஸ்அப் மூலம் பிஎன்ஆர் எண்ணைக் கொண்டு ஆர்டர் செய்யும் பயணிகளின் இருக்கைக்கே உணவு டெலிவரி செய்யப்படும்.

ஆர்டர் செய்த உணவை ரியல் டிராக் செய்யும் வசதியும் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி பயணிகள் +91 7042062070 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் சாட் செய்து உணவை ஆர்டர் செய்ய முடியும். எந்த உணவகத்திலிருந்து எந்த உணவு தேவை என்பதை குறிப்பிட்டு உணவுகளை ஆர்டர் செய்ய முடியும்.

ஆர்டர் உறுதி செய்யப்பட்டதும் உணவு பயணிகளின் இருக்கைக்கே கொண்டு வந்து டெலிவரி செய்யப்படும். இந்த சேவை குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விஜயவாடா, வதோதரா, மொராதாபாத், வாரங்கல் என நூற்றுக்கும் மேற்பட்ட A1, A மற்றும் B வகை ரயில் நிலையங்களில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த திட்டம் படிப்படியாக மற்ற ரயில் நிலையங்களிலும் அறிமுகம் செய்யப்படும் என இந்தியன் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in