சீனாவிலிருந்து வருபவர்களுக்கு கரோனா சோதனை கட்டாயம் - ஆக்ஸிஜனை தயாராக வைக்கவேண்டும்: மத்திய அரசு உத்தரவு

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை

சீனாவில் புதிய வகை கரோனா அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் எத்தகைய கோவிட் அவசரநிலையையும் எதிர்கொள்வதற்காக மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. சீனாவில் அதிகமாக பரவிவரும் BF.7 ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் சிலருக்கு பரவியுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கட்டாயமாக கோவிட் பரிசோதனை சான்றிதழைக் காட்ட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தெரிவித்துள்ளார். அந்த 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது பாதிப்பு உறுதிசெய்யப்பட்டாலோ அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

2021- ம் ஆண்டின் மத்தியில் இந்தியாவில் உருவான இரண்டாவது கரோனா அலையின் ஆரம்ப நாட்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, நாட்டில் ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. எனவே மருத்துவ ஆக்சிஜன் மேலாண்மை குறித்த அரசாங்கத்தின் சமீபத்திய ஆலோசனைக் கூட்டத்தில், ஆக்சிஜன் ஆலைகள் முழுமையாக செயல்பட வேண்டும் என்றும், அவற்றை சரிபார்க்க வழக்கமான ஒத்திகை பயிற்சிகள் செய்யப்பட வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், திரவ மருத்துவ ஆக்சிஜன் அல்லது எல்எம்ஓ கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவற்றை மீண்டும் நிரப்புவதற்கு தடையில்லா விநியோகச் சங்கிலி உறுதி செய்யப்பட வேண்டும் என்று அரசு தனது கடிதத்தில் கூறியுள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி தனது கடிதத்தில் , "நாட்டில் கோவிட் வழக்குகள் குறைவாக இருந்தாலும், தற்போது அதிகரிக்கவில்லை என்றாலும், எதிர்காலத்தில் எழும் சவால்களை எதிர்கொள்ள, இந்த மருத்துவ உள்கட்டமைப்பை செயல்படுத்துவதும் பராமரிப்பதும் மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in