ஆவின் பால் பாக்கெட்டில் இறந்து கிடந்த ‘ஈ’: சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

ஆவின் பால் பாக்கெட்டில் இறந்து கிடந்த ‘ஈ’: சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

ஆவின் பால் பாக்கெட் ஒன்றில், 'ஈ' இறந்து மிதந்த நிலையில் வெளியான, வீடியோவால் மதுரை பகுதியில் ஆவின் நுகர்வோரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

ஆவின் நிறுவனம் மீது அடிக்கடி சர்ச்சைகள் வெடிப்பது வழக்கமாகிவிட்டது. பாலில் அதிக அளவு தண்ணீர் கலப்படம், அளவு குறைவு, அதிகாரிகள் முறைகேடு என அடிக்கடி சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பும். அந்த வகையில் இறந்து கிடந்த 'ஈ' ஒன்றுடன் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகச் சர்ச்சை கிளம்பி இருக்கிறது. மதுரை ஆவின் சார்பில், ஐந்து வகையான பால் பாக்கெட்டுகள் நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்யப்படுகின்றன. இவை, 40க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெப்போக்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன.

பல்கலைநகர் அருகே உள்ள டெப்போவில் அரை லிட்டர் எஸ்.எம்., பச்சை நிற பாக்கெட் ஒன்றை அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்றதும் அந்த பால் பாக்கெட்டில் 'ஈ' ஒன்று இறந்து கிடந்ததைக் கண்ட அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து அந்த பால் பாக்கெட்டை அந்த டெப்போவில் அவர் திரும்பக் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து அந்த டெப்போவிற்கு வந்த அதிகாரிகள் இது குறித்து படங்களைச் சமூகவலைதளங்களில் பதியாதவாறு பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திச் சென்றுள்ளனர். அதற்கு முன்பே இந்த வீடியோ மதுரை பகுதியில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in