ஆயுத பூஜை எதிரொலியாக பூக்களின் விலை கிடு, கிடு உயர்வு: பிச்சிப்பூ கிலோ 1,250 ரூபாய்

ஆயுத பூஜை எதிரொலியாக பூக்களின் விலை கிடு, கிடு உயர்வு: பிச்சிப்பூ கிலோ 1,250 ரூபாய்

ஆயுத பூஜைப் பண்டிகை எதிரொலியாக பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தோவாளை மலர் சந்தையில் ஒரு கிலோ பிச்சிப்பூ இன்று 1250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் பிரசித்தி பெற்ற மலர் சந்தை உள்ளது. நூற்றாண்டு பழமையான இந்த மலர் சந்தையில் இருந்து தமிழகம், கேரளத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மலர்கள் செல்வது வழக்கம். ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களுக்கானத் தேவைகள் அதிகரித்துள்ளன. குமரி மாவட்டம், தோவாளையில் உள்ள மலர்சந்தையில் கேரள வியாபாரிகள் அதிகளவில் பூக்களை வாங்கக் குவிந்து வருகின்றனர்.

ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பிச்சிப்பூ 1,250 ரூபாய்க்கும், ஒரு கிலோ மல்லிகைப்பூ 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், சேலம் அரளி கிலோ 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சம்பங்கி கிலோ 400 ரூபாய்க்கும், சிவப்பு கேந்தி 120 ரூபாய்க்கும், மஞ்சள் கேந்தி 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மரிக்கொழுந்து 150 ரூபாய்க்கும், கொழுந்து 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கனகாம்பரம் ஒரு கிலோ 600 ரூபாய்க்கும், முல்லைப்பூ கிலோ 1,250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தாமரைப்பூ 12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு மக்கள் கடைகள், வியாபார ஸ்தலங்களில் பூஜை போடுவது வழக்கம். இதனால் தோவாளை மலர் சந்தையில் பூக்களை வாங்கி விற்கும் வியாபாரிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in