சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்: ஜுன் 3 முதல் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி!

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்: ஜுன் 3 முதல் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி!
செம்மொழி பூங்கா

ஜூன் 3 முதல் 5-ம் தேதி வரை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறும் தமிழக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது சென்னை மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்ளிட்ட பல இடங்களில் மலர் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. இதனிடையே, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சென்னையில் செம்மொழி பூங்காவில் ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மலர் கண்காட்சி நடத்தப்படும் என்று தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

தோட்டக்கலைத் துறை இயக்குநர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், `செம்மொழி பூங்காவில், அரியவகை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை, தாவரவியல் பயிலும் மாணவர்களுக்களுக்கு உதவியாக உள்ளது. கோடை காலத்தில், அரியவகை மலர்களை பயன்படுத்தி, மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இவை, நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து எடுத்துவரப்படுகிறது. மலர் கண்காட்சியை காண வரும் குழந்தைகள் பொழுதை கழிக்கவும், பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. மற்ற பூங்காக்களிலும், படிப்படியாக கண்காட்சி நடத்தப்படும்.

பெங்களூரு, உதகை மற்றும் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மலர் வகைகளை கொண்டு கண்காட்சி நடத்தப்படுகிறது. மலர் கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம். மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு ரூபாய் 20 கட்டணமாகவும், பெரியவர்களுக்கு ரூபாய் 50 நுழைவு கட்டணமாகவும் வசூலிக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக, செம்மொழி பூங்காவில், கடந்த 2022 ஆண்டு, ஜூன் மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. இதற்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, இரண்டாவது மலர் கண்காட்சி, ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளதால் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in