வெள்ளத்தால் மூழ்கிய கிராமம்… மணப்பெண்ணுக்கு படகு தந்து உதவிய பேரிடர் மீட்புக்குழு: நெகிழ வைத்த திருமண நிகழ்வு

வெள்ளத்தால் மூழ்கிய கிராமம்… மணப்பெண்ணுக்கு படகு தந்து உதவிய பேரிடர் மீட்புக்குழு: நெகிழ வைத்த திருமண நிகழ்வு

ஆந்திராவில் கனமழையால் ஊரே வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் மணப்பெண்ணுக்கு படகு தந்து அவர் திருமணத்தை நடத்த மாநில பேரிடர் மீட்புப்படையினர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கனமழையால் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதாவரி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் மேற்கு கோதாவரி, கோனசீமா மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களை மூழ்கடிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கோனசீமா மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்திக்கு நேற்று திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணமகன் அசோக் வீட்டிற்குச் செல்ல முடியாத அளவிற்கு கிராமம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதன் காரணமாக சாலை வழியாக வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மணமகள் வீட்டார் எப்படி மணமகன் வீட்டிற்குச் செல்வது என்று தவித்தனர்.
மணப்பெண் புதுப்புடவை உடுத்தி தயார் நிலையில் இருக்க, அவரது குடும்பத்தினர் ஏதாவது படகு உதவி கிடைக்குமா என்று தேடினர். இந்த தகவலை அறிந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர், தங்களது படகுகளில் மணப்பெண் பிரசாந்தி மற்றும் அவரது குடும்பத்தினரை மணமகன் வீட்டிற்குப் பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதன் பின் அங்கு பிரசாந்தி, அசோக் திருமணம் நடைபெற்றது. உரிய நேரத்தில் உதவிய மாநில பேரிடர் மீட்புப் படையினருக்கு கோனசீமா மாவட்ட மக்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in