குமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

குமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக அணையோரப் பகுதிகளிலும், ஆற்றங்கரையோர பகுதிகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து அணையோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அணைகளின் நீர்மட்டமும் கணிசமான அளவுக்கு உயர்ந்து வருகிறது. குமரி மாவட்டத்தின் ஜீவாதார நதியான பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி 42.58 அடியாக நீர்மட்டம் இருந்தது. இதேபோல் அணைக்கு 1102 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் அணை திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குழித்துறை கோதையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பெருஞ்சாணி அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. 72 அடியைத் தாண்டிய நிலையில் அங்கும் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் பரளியாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் அருவிக்கரை, மூவாற்றுமுகம், திருவட்டாறு, தேங்காய் பட்டிணம் ஆகிய பகுதிகளில் இருக்கும் கரையோர மக்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்மாறு பொதுப்பணித்துறை(நீர் வளம்) அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in