வேகமாக நிரம்பி வரும் அணைகள்: குமரி மாவட்டத்தில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மழை
மழைhindu கோப்பு படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது. தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. தொடர் மழையின் காரணமாக குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. அதேநேரத்தில் அணையோரப் பகுதிகளிலும், அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 20.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தின் முக்கிய ஜீவாதார அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளும் வேகமாக நிரம்பிவருகிறது. பேச்சிப்பாறை அணையின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதேபோல் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தொடர் மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. விடுமுறை நாளான இன்று சுற்றுலாப் பயணிகள் உற்சாகக் குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in