ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு... பறிபோன உயிர்கள்: குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு நடந்த சோகம்

ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு... பறிபோன உயிர்கள்: குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு நடந்த சோகம்

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவியில் நேற்று மாலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அருவியில் குளித்துக்கொண்டிருந்த இரு பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் இருவரைத் தேடும்பணியும் நடந்து வருகிறது.

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவி மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் சீசன் தொடங்கும். அந்தவகையில் குற்றாலத்தில் இப்போது சீசன் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்து உற்சாகக் குளியல் போடுகின்றனர்.

அருவியில் தண்ணீர் இதமாக பாய்ந்தாலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் கனமழையின் காரணமாக அவ்வப்போது குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஆனால் இதைப்பற்றித் தெரியாத சுற்றுலாப் பயணிகள், தண்ணீர் மெதுவாகத்தானே பாய்கிறது என நினைத்து ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். நேற்று மாலையும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் ஐந்தருவியின் அனைத்துக் கிளைகளிலும் திடீர் எனத் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டிய தண்ணீர், பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி பாய்ந்தது.

இதில் 5 சுற்றுலாப்பயணிகள் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார். ஆர்ப்பரித்த வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு பாறைகளில் மோதியதில், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி மல்லிகா, கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவரது மனைவி கலாவதி ஆகியோர் உயிர் இழந்தனர். மேலும் இருவரை மீட்புக்குழுவினர் தேடிவருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in