சென்னை- அந்தமான் இடையே விமான சேவை 3 நாட்கள் ரத்து: காரணம் இதுதான்!

சென்னை- அந்தமான் இடையே விமான சேவை 3 நாட்கள் ரத்து: காரணம் இதுதான்!

சென்னை- அந்தமான் இடையே இரு மார்க்கங்களிலும் வரும் 18-ம் தேதி வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் சீர்காழியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 14 சென்டிமீட்டர் மழை பெய்து அந்த மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து விட்டது.

இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் முதல் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை- அந்தமான் இடையே விமான சேவை வரும் 18-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் அந்தமான் விமான நிலைய ஓடுபாதை பராமரிப்பு பணிகள் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னை- அந்தமான் இடையே நாள்தோறும் 16 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in