நடுவானில் விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போதையில் ரகளை செய்த இருவர் கைது

நடுவானில் விமானப் பணிப்பெண்ணுக்கு  பாலியல் தொல்லை: போதையில் ரகளை செய்த இருவர் கைது

டெல்லியில் இருந்து பாட்னா சென்ற விமானத்தில் விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன் போதையில் ரகளையில் ஈடுபட்ட பிஹாரைச் சேர்ந்த இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு இண்டிகோ விமானம் நேற்று சென்றது. அப்போது இந்த விமானத்தில் பிஹாரைச் சேர்ந்த 2 பயணிகள் குடிபோதையோடு பயணம் செய்துள்ளனர். இரவு நேரத்தில் அவர்கள் விமான பணிப்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டனர். அத்துடன் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பணிப்பெண் சத்தம் போடவும், சக பயணிகள், பிஹாரைச் சேர்ந்த அந்த 2 பயணிகளை சமாதானம் செய்துள்ளனர். இந்த சப்தம் கேட்டு சமாதானம் செய்ய வந்த விமான கேப்டனை பிஹாரைச் சேர்ந்த அந்த 2 பயணிகளும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விமானத்தின் கேப்டன் புகார் கொடுத்தார். இதையடுத்து பாட்னா விமான நிலையத்தில் இறங்கிச் செல்ல முயன்ற அந்த 2 பிஹாரைச் சேர்ந்த பயணிகளையும் விமான நிலைய போலீஸார் கைது செய்தனர். மதுபோதையில் நடுவானில் அநாகரீகமாக நடந்து கொண்ட அவர்கள் இருவரும், பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in