ராஜபாளையத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: அய்யனார் கோயிலுக்கு சென்ற 150 பேர் சிக்கினர்!

ராஜபாளையத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: அய்யனார் கோயிலுக்கு சென்ற 150 பேர் சிக்கினர்!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள அய்யனார் கோயில் ஆற்றில் திடீர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 150க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி தவித்தனர். அவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக, கேரளா பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதியில் செல்லக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 44 சென்டிமீட்டர் மழையும், கொள்ளிடத்தில் 32 சென்டிமீட்டர் மழையும், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 31 சென்டிமீட்டர் மழையும், அண்ணாமலை நகரில் 28 சென்டிமீட்டர் மழையும், சிதம்பரத்தில் 27 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 122 ஆண்டுகளுக்குப் பிறகு சீர்காழியில் 44 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம், ராஜாபாளையத்தில் மழை நீர் கொட்டி தீர்த்தது. அங்குள்ள அய்யனார் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். இதனிடையே, திடீரென அய்யனார் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கோயிலுக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்டர் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in