கண்டெய்னர் மீது மோதிய வேகத்தில் அப்பளமாய் நொறுங்கிய கார்: 5 பெண்கள் துடி துடித்துச் சாவு

கண்டெய்னர் மீது கார் மோதி  5 பெண்கள் பலி
கண்டெய்னர் மீது கார் மோதி 5 பெண்கள் பலிகண்டெய்னர் மீது மோதிய வேகத்தில் அப்பளமாய் நொறுங்கிய கார்: 5 பெண்கள் துடி துடித்துச் சாவு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சாலையோரம் நின்றுகொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 5 பெண்கள்  உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோர் பாளையத்தை சேர்ந்த ஐந்து பெண்கள்,  ஒரு குழந்தை உள்ளிட்ட ஏழு பேர் நேற்று ஒரு காரில் கிளம்பி திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர்  பொன்னர் - சங்கர் கோயில் மாசித் திருவிழாவுக்கு சென்றிருந்தனர்.

கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு குழந்தையுடன் மீண்டும் திருச்செங்கோடு நோக்கி திரும்பிக்  கொண்டிருந்தனர். ரவி என்பவர் காரை ஓட்டினார். அவரது மனைவி கவிதா ,  கந்தாயி, குஞ்சம்மாள், சாந்தி, சுதா ஆகிய பெண்கள், நான்கு வயது  குழந்தை உள்ளிட்டவர்கள் காரில் இருந்தனர்.

பரமத்திவேலூர் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது  சாலையோரம் நின்றுகொண்டு இருந்த கண்டெய்னர் லாரியை கவனிக்காததால் அதன் மீது கார் பயங்கரமாக மோதியது.  இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி முற்றிலுமாக சிதலமடைந்தது. காரில்  இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு படுகாயம் அடைந்தனர். 

திருச்செங்கோடு போலீஸார்  மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து காரின் பாகங்களை அப்புறப்படுத்தி உள்ளிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.  ஆனால் ஐந்து பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  காரில் இருந்த 4 வயது குழந்தை,  ரவி மற்றும் ஒரு பெண்  ஆகியோர் படு காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

கோயிலுக்குச் சென்று விரும்பிய பெண்கள் ஐந்து பேர் கார் விபத்தில் பலியாகி இருப்பது  திருச்செங்கொடு சுற்றுவட்டார பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in