ராட்சத அலையில் சிக்கிய பொதுமக்கள்: போராடி மீட்ட மீனவர்கள்!

ராட்சத அலையில் சிக்கிய பொதுமக்கள்: போராடி மீட்ட மீனவர்கள்!

சென்னை திருவொற்றியூர் அருகே கடலில் குளிக்கச் சென்று ராட்சத அலையில் சிக்கிய பொதுமக்களை, அப்பகுதி மீனவர்கள் போராடி மீட்டனர். கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய இரு பெண்கள் உட்பட நால்வரை மீனவர்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருவொற்றியூர் கே.வி.குப்பம் கடற்கரையில் அதே பகுதியை சேர்ந்த ஆறு பேர் கடலில் இறங்கி குளித்துக் கொண்டு இருந்தனர். இதில் இரண்டு பேர் மட்டும் கரை ஏறிய நிலையில், இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வரை ராட்சத அலை இழுத்துச் சென்றது.

கரையை நோக்கி நீந்த முயன்றவர்களை அலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றன. அவர்கள் உயிருக்கு போராடி தத்தளிப்பது குறித்த தகவல், அப்பகுதி மீனவர்களுக்கு சென்றது. சம்பவ இடத்துக்கு விரைந்த மீனவர்கள் உடனடியாக கயிறு மற்றும் வலைகளை வீசி அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். அலையில் சிக்கியவர்கள் சற்று நேர போராட்டத்துக்குப் பின்னர் கரையேறி உயிர் தப்பினர்.

முன்னதாக திருவொற்றியூர், எண்ணூர் மற்றும் எர்ணாவூர் கடல் பகுதிகளில், விடுமுறை தினங்களில் கடல் அலையில் சிக்கி பலர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீனவர்களின் உதவியால் நல்வாய்ப்பாக நான்கு பேரும் காப்பாற்றப்பட்டனர். இந்த பகுதிகளில் குளிக்கக் கூடாது என காவல்துறை அறிவுறுத்தி உள்ள போதும், ஆபத்தை உணராத சிலரால் அசம்பாவிதங்கள் தொடர்கதையாகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in