தொடர்ந்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை - 11 நாட்களாக கடலுக்குச் செல்லாத மீனவர்கள்

தொடர்ந்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை -
11 நாட்களாக கடலுக்குச் செல்லாத மீனவர்கள்

வங்க கடலில் தொடர்ந்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில்  சீர்காழி முதல் தரங்கம்பாடி  வரையிலான 26 கிராம மீனவர்கள் 11வது நாளாக இன்றும்  கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் விளைவாக பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கடல் சீற்றம் காரணமாக கடந்த 9ம் தேதி முதல் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வின் காரணமாக 22-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

இதனால் சீர்காழியை அடுத்த பழையார், தொடுவாய், கூழையார், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி, சின்னங்குடி முதல் தரங்கம்பாடி வரையிலான 26 மீனவ கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரம் மீனவர்கள் பதினோராவது நாளாக இன்றும்  கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 350 விசைப்படகுகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் மற்றும் நாட்டுப் படகுகள் அந்தந்த மீனவ கிராமங்களில்  மீன்பிடி துறைமுகங்களிலும், முகத்துவாரம் அருகே உள்ள ஆறுகளிலும் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

கடலுக்குச் செல்லாததன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 5  கோடி மதிப்பிலான மீன் வர்த்தகம்  பாதிப்படைந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in