நடுக்கடலில் குமரி‍- நெல்லை மீனவர்கள் மோதல்: பெட்ரோல் குண்டு வீச்சு, தப்பிய உயிர்கள்

நடுக்கடலில் குமரி‍- நெல்லை மீனவர்கள் மோதல்: பெட்ரோல் குண்டு வீச்சு, தப்பிய உயிர்கள்

கன்னியாகுமரி மீனவர்களுக்கும், நெல்லை மீனவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் நடுக்கடலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டத்தில் மீன்பிடித்துறைமுகம் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்தவர் சில்வாஸ்டர்(52). இவரது விசைப்படகில் இதேபகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அதேபகுதியில் இடிந்தகரை பகுதியைச் சேர்ந்த அரசு என்பவருக்கு சொந்தமான வல்லத்தில் மீனவர்கள் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த வலையை, விசைப்படகு சேதப்படுத்தி உள்ளது. இதனால் இருதரப்பிற்கும் இடையே தகராறு வெடித்தது.

இடிந்தகரை மீனவர்கள் தங்கள் ஊருக்கும் இதுகுறித்துத் தகவல் கொடுக்க உடனே 50க்கும் அதிகமான மீனவர்கள் தங்கள் வள்ளங்களில் வந்து குமரி மீனவர்களை சுற்றிவளைத்தனர். குமரி, சின்னமுட்டம் மீனவர்களின் விசைப்படகின் மீது பெட்ரோல் குண்டையும் வீசினர். இதில் விசைப்படகு சேதமானது. மீனவர்கள் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர். இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த மோதல் சம்பவம் எதிரொலியாக சின்னமுட்டம், இடிந்தகரை கிராமங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in