ஹெலிகாப்டரில் 3-வது நாளாக தேடப்படும் கீழக்கரை மீனவர்: தொழிலுக்கு செல்லாமல் காத்திருக்கும் உறவுகள்

ஹெலிகாப்டரில் 3-வது நாளாக தேடப்படும் கீழக்கரை மீனவர்: தொழிலுக்கு செல்லாமல் காத்திருக்கும் உறவுகள்

கீழக்கரை அருகே தீவு பகுதியில் மீன்பிடிக்கச் சென்று கடலில் மாயமான மீனவரை 3-வது நாளாக தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே மாயாகுளம் பாரதி நகர், சிவகாமிபுரம், விவேகானந்தபுரம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஓலை கயறு மீனவர் 11 பேர்  நாட்டுப் படகில் நேற்று முன்தினம் காலை மீன்பிடிக்கச் சென்றனர்.  இவர்கள் அப்பா தீவு அருகே வலைவிரித்து கடலில் இறங்கி மீன் பிடியில் ஈடுபட்டனர். 5 மணி நேர மீன்பிடித்தப் பின் வலையை அடுக்கிக்கொண்டு படகில் ஏறி கரை திரும்ப முயன்றனர். அப்போது பாரதி நகர் கருப்பையா மகன் முனியசாமி (50) மாயமானார். நீண்ட நேரம் தேடியும், கிடைக்காமல் கவலையில் கரை திரும்பிய சக மீனவர்கள் கீழக்கரை மெரைன் போலீஸார்,

ராமநாதபுரம் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அனுமதியின் பேரில் 2 நாட்டுபடகுகள் மூலம் சக மீனவர்கள் சென்று தேடியும் முனியசாமி தென்படவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் மாலை வரை தேடிய மீனவர்கள் கரை திரும்பினர். இந்திய கடற்படை ஐஎன்எஸ் பருந்து உச்சிப்புளி விமானதள ஹெலிகாப்டர், அப்பா தீவு பகுதிகளில் தாழ்வாக பறந்து சென்று தேடியும் முனியசாமி பற்றி எந்த தகவலுமில்லை. இன்று (ஜன.11) 3-வது நாளாக மீனவர்கள் மீண்டும் தேடிச்சென்றுள்ளனர். தேடும் பணி தீவிரமடைந்துள்ளதால், 2-வது நாளாக மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in