சென்னை எண்ணூரில் மீனவரின் தலையில் கல்லை போட்டுக் கொன்ற கொடூரம்; போலீஸார் தீவிர விசாரணை

சென்னை எண்ணூரில் மீனவர் கொலை; தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரம்!
சென்னை எண்ணூரில் மீனவர் கொலை; தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரம்!

சென்னை எண்ணூரில் மீனவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை எண்ணூர் கடற்கரை மணலில் கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், கடற்கரை மணலில் தலையில் கல்லைப் போட்ட நிலையில் சடலம் கிடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், தலையில் கல்லைப் போட்டு அடித்து கொல்லப்பட்டவர் எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் என தெரியவந்தது. இதையடுத்து கடற்கரை மணலில் கிடந்த ரஞ்சித்குமாரின் உடலை கைபற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

ரஞ்சித்குமாரின் தலையில் கல்லைப் போட்டு அடித்து கொன்ற கொலையாளி குறித்து எண்ணூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மீனவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தால் எண்ணூர் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in