`மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்': மீன்வளத்துறை எச்சரிக்கை

`மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்': மீன்வளத்துறை எச்சரிக்கை

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதால் டிசம்பர் 4-ம் தேதி முதல் மீனவர்கள் வங்கக் கடலில்  மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என நாகப்பட்டினம் மாவட்ட  மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 5-ம் தேதியன்று வங்கக் கடலில் அந்தமான் கடல் பகுதி அருகே  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து  நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளத்துறை  உதவி இயக்குனர் கோ. ஜெயராஜ் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ``டிசம்பர் 5-ம் தேதி வங்கக்கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது,  இந்தியப் பெருங்கடல் வழியாக நகர்ந்து தமிழக கடலோரப்  பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே விசைப்படகு மீனவர்கள்  டிச.4-ம் தேதி முதல் கடலுக்கு  மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதர  மாவட்ட படகுகளிலும் சென்று மீன் பிடிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் கடலுக்குள் சென்றிருக்கும் படகுகளை டிசம்பர் 5-ம் தேதிக்குள் கரை திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.  கரையோரம் இருக்கும் படகுகள், எந்திரம், மீன்பிடி வலைகள் ஆகியவற்றை  பாதுகாப்பான இடத்தில்  வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த அறிவிப்பினை மீறி கடலுக்குள் செல்லும் மீனவர்கள் மீது தமிழ்நாடு கடல்  மீன்பிடி ஒடுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in