குடியரசு தலைவர்
குடியரசு தலைவர்

குடியரசு தலைவர் ஊருக்கு முதல் முறையாக ரயில்... ரயில்வே அமைச்சர் அறிவிப்பு!

குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் சொந்த மாநிலமான ஒடிசாவில் இருக்கும்  அவரது சொந்த ஊரான ராய்ரங்க்பூருக்கு  தற்போது தான் முதல்முறையாக ரயில்  இயக்கப்பட உள்ளது. 

கடந்த ஆண்டு நடந்த குடியரசு தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். அவர் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் அந்த மாவட்டத்தில் இருந்து பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகியவற்றை  இயக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், குடியரசு தலைவர் முர்முவின் சொந்த ஊரான ராய்ரங்க்பூர் அருகில் உள்ள பதாம்பாஹர் உள்பட 4 இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில் இயக்குவதற்கு தென்கிழக்கு ரயில்வே முன் வந்துள்ளது. இதையடுத்து நான்கு ரயிக்களுக்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ரயில்
ரயில்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in