வனவிலங்குகள் ஊருக்குள் வந்தால் இனி கவலை வேண்டாம்... ஏ.ஐ முதல்கட்ட சோதனை வெற்றி!

யானை
யானை
Updated on
2 min read

குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்ட ஏ.ஐ முதல்கட்ட சோதனை கேரளாவில் வெற்றி பெற்றுள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ஏ.ஐ கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

டிஜிட்டல் அக்யூஸ்டிக் சென்சிங் தொழில்நுட்ப முறை
டிஜிட்டல் அக்யூஸ்டிக் சென்சிங் தொழில்நுட்ப முறை

டிஜிட்டல் அக்யூஸ்டிக் சென்சிங் (டிஏஎஸ்) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படும் இந்த கேமராக்களின் முதல் சோதனை பாலக்காடு-காஞ்சிகோடு சாலையில் உள்ள பன்னிமடா பிரிவு வனப்பகுதியில் நடத்தப்பட்டது. இந்த முதல்கட்டச் சோதனை வெற்றியடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலக்காடு-காஞ்சிகோடு சாலை வழியாகத்தான் மலம்புழா, அரங்கோட்டுக்குளம், வேனோலி போன்ற மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு காட்டெருமைகள் தொடர்ந்து வந்து செல்கின்றன.பகல் மற்றும் இரவு நேரங்களில் படம் பிடிக்கும் தெர்மல் கேமரா மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டது.

காட்டெருமை
காட்டெருமை

நிலத்தடியில் ஒரு மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட்ட ஆப்டிகல் ஃபைபர் கேபிள் மூலம் கட்டுப்பாட்டு நிலையத்தில் தகவல் பெறும் வகையில் இந்த கேமிரா அமைக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் அல்லது விலங்குகள் நடக்கும்போது ஏற்படும் அதிர்வுகள், லேசர் அலைகள் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் வழியாக தொடர்ச்சியாகப் பிடிக்கப்பட்டு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மென்பொருளில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. வாட்ஸ் அப், டெலிகிராம், எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மூலம் ஆர்ஆர்டி குழுவிற்கு இதைத் தெரிவிக்கும்.

ஏ.ஐ தொழில்நுட்பம்
ஏ.ஐ தொழில்நுட்பம்

இதுகுறித்து தினேஷ் ஐடி சிஸ்டம் ஆபரேஷன்ஸ் ஹெட் அபிலாஷ் ரவீந்திரன் கூறுகையில், " விலங்குகளின் உண்மையான இருப்பிடம் குறித்து ஆய்வு நடத்த பன்னிமட வனப்பகுதியில் 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் செயல்பாட்டினை உறுதி செய்த பின், மற்ற பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

என் கணவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது... முதல்வர் தனிப்பிரிவில் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி மனு!

மீண்டும் சர்ச்சையில் டிடிஎப் வாசன்... கார் ஓட்டி அட்ராசிட்டி!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு... மேலும் குறையுமா?!

சென்னையில் இருந்து கப்பலில் அனுப்பப்பட்ட 27 டன் வெடிபொருட்கள்... துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அரசு அனுமதி மறுப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in