ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில்: சென்னைக்கு வருகிறது!

ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில்: சென்னைக்கு வருகிறது!

சென்னைக்கு ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் வருகிறது. 2024-ல் இந்த மெட்ரோ ரயில் இயக்கப்படலாம் என்று தெரிகிறது.

சென்னை விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னை கோயம்பேட்டில் இருந்து வடபழனி வழியாக சென்னை விமான நிலையத்திற்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருவது. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மழை காலங்களில் பொதுமக்கள் அதிகமாக மெட்ரோ ரயிலை பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் புறநகர் ரயிலை விட மெட்ரோ ரயிலில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது. இதனால் ஏழை, எளிய மக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் ஓட்டுநர் இல்லாமல் மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. சென்னை அண்ணாசாலை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் தயாரிப்பிற்கான 946 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ இயில்களை உருவாக்க திட்டமிடப்பட்டது. இதன் படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் திருவாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குநர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆளில்லா முதல் மெட்ரோ இயில் 2024-ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அதை தொடர்ந்து ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in