வைரல் வீடியோ : இந்தியாவின் முதல் ‘3-டி பிரிண்டட்’ தபால் நிலையம் திறப்பு!

3-டி பிரிண்ட் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் உருவான பெங்களூரு தபால் நிலையம்
3-டி பிரிண்ட் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் உருவான பெங்களூரு தபால் நிலையம்

இந்தியாவின் சுயசார்பு மற்றும் வளர்ச்சியின் பாதையில் இன்னொரு மைல்கல்லாக, நாட்டின் முதல் 3-டி பிரிண்டட் தபால் நிலையம் பெங்களூருவில் இன்று திறப்பு விழா கண்டிருக்கிறது.

நவீன 3-டி பிரிண்ட் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தால் 1,100 சதுர அடியில் இந்த தபால் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை ஐஐடி நிறுவனத்தால் இந்த கட்டிடத்தின் வடிவமைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணியின் போது..
கட்டுமானப் பணியின் போது..The Hindu

வளர்ந்த நாடுகள் மத்தியில் கட்டிட வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் துறையில் பிரபலமான 3-டி பிரிண்ட் தொழில்நுட்பம் தற்போது இந்தியாவிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மிகவும் குறைந்த செலவு மற்றும் கால அவகாசத்தில், நவீன கட்டுமானங்களை இந்த தொழில்நுட்பத்தின் கீழ் எளிதில் உருவாக்கலாம்.

மேலும் மறுசுழற்சி அடிப்படையில், கணிசமான கழிவுப் பொருட்கள் இதில் பயன்படுத்தப்படுவதால், சுற்றுச்சூழலுக்கும் 3-டி பிரிண்ட் கட்டுமானம் இசைவானதாகும். முக்கியமாக, கட்டுமானத் துறையின் மிகப்பெரும் சவாலான பணியாட்கள் தட்டுப்பாடுக்கும் 3-டி பிரிண்டட் கட்டுமானம் சுலபத் தீர்வு காண்கிறது.

பெங்களூரு கேம்பிரிட்ஜ் லேஅவுட் பகுதியில் அமைந்திருக்கும் இந்த முப்பரிமாண அச்சுவார்ப்பு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான அஞ்சல் நிலையத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று திறந்து வைத்துள்ளார். மேலும் 3-டி தொழில்நுட்பத்தில் கட்டுமானம் உருவான விதத்தை குறுகத் தரித்த வீடியோவாகவும் அவர் வெளியிட்டுள்ளார். நாட்டின் பெருமைக்குரிய பெங்களூரு 3-டி கட்டுமான தபால்நிலையத்தின் படங்களை பகிர்ந்து, பிரதமர் மோடியும் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். ஹலசுரு பஜார் பகுதியில் இயங்கிவரும் தபால் நிலையம் விரைவில் இந்த புதிய கட்டிடத்தில் இருந்து செயல்பட உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in