திண்டுக்கல் தம்பதி பலி: வெடித்தது பட்டாசா அல்லது காஸ் சிலிண்டரா?

திண்டுக்கல் தம்பதி பலி: வெடித்தது பட்டாசா அல்லது காஸ் சிலிண்டரா?

திண்டுக்கல் அருகே நிகழ்ந்த வெடி சம்பவத்தில் வீட்டின் இடிபாடுகளில் சிக்கி தம்பதி உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீரக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (40). இவர் திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலாளராக இருந்தார். இவரது மனைவி நாகராணி (35). இவர்களுக்கு தீப்திகா( 7), கனிஷ்கா (5), மோகன்(4) என 3 குழந்தைகள் உள்ளனர்.

ஜெயராமன் செம்பட்டி-வத்தலகுண்டு ரோடு புல் வெட்டிகுளம் தனியார் வணிக வளாகத்தில் பட்டாசு கடை நடத்தி வந்தார். வணிக வளாகத்தின் மாடி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தம்பதி இருவரும் மாடியில் இருந்தனர். குழந்தைகள் சாலை ஓரம் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது இரு முறை ஏற்பட்ட வெடிச் சம்பவத்தில் மாடி முற்றிலும் இடிந்து நாசமானது. வெடிச் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கே கூடினர். வீடு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமாகின. தகவல் அடிப்படையில், செம்பட்டி போலீசார் அங்கு வந்தனர்.

தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆத்தூர், வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இடிபாடுகளில் சிக்கி ஜெயராமன், நாகராணி ஆகியோர் உயிரிழந்தது இரவு 10 மணியளவில் தெரிந்தது.

சம்பவ இடம் வந்த திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரன் மீட்கும் பணியை துரிதப்படுத்தினர். வெடித்தது பட்டாசா அல்லது சிலிண்டரா என்பது குறித்து செம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in