வெடித்து சிதறிய பேன்சி ரக பட்டாசுகள்: சட்ட விரோதமாக தயாரித்தவர் உயிரிழப்பு!

வெடித்து சிதறிய பேன்சி ரக பட்டாசுகள்: சட்ட விரோதமாக தயாரித்தவர் உயிரிழப்பு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது அந்தப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகில் புசாரித்தேவன்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள காளியம்மன் கோயில் அருகே கோபாலன்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி(29). இவர் தீபாவளிப் பண்டிகை வருவதை முன்னிட்டு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் குழாய்கள் தயாரித்து வந்தார். அவர் அதே பகுதியில் உரிய அனுமதியின்றி பேன்ஸி ரக பட்டாசுகளையும் தயாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று மாலை திருப்பதியும், அதேபகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் சேர்ந்து பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென வெடி வெடித்தது. இதில் திருப்பதியும், அவரோடு சேர்ந்து பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்ட சிறுவனும் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலையில் திருப்பதி பரிதாபமாக உயிர் இழந்தார் . இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in