ஆக்சிஜன் வாயு நிரப்பும்போது வெடித்து சிதறிய சிலிண்டர்: தீயணைப்பு வீரருக்கு நடந்த துயரம்

ஆக்சிஜன் வாயு நிரப்பும்போது வெடித்து சிதறிய சிலிண்டர்: தீயணைப்பு வீரருக்கு நடந்த துயரம்

தீயணைக்க பயன்படும் ஆக்சிஜன் சிலிண்டரில் ஆக்சிஜன் வாயு நிரப்பும்போது திடீரென சிலிண்டர் வெடித்ததில் படுகாயம் அடைந்த தீயணைப்பு வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மத்திய மண்டல தீயணைப்புத்துறை நிலைய போக்குவரத்து பிரிவு அலுவலகத்தில்  இன்று காலை தீயணைப்பு வீரர் பிரசாந்த் என்பவர்  ஆக்சிஜன் சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பும்  பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது திடீரென எதிர்பார்க்காத விதமாக சிலிண்டர் வெடித்தது. இதனால் பிரசாந்தின் இடது காலில் படுகாயம் ஏற்பட்டது. அப்பொழுது அங்கிருந்த  நிலைய அலுவலர் சரவணன்  உடனடியாக பிரசாந்த்தை  சிகிச்சைக்காக  அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.  அங்கு முதலுதவி செய்யப்பட்டு பின்னர்  மேல் சிகிச்சைக்காக பிரசாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆக்ஸிஜன் சிலிண்டர் நிரப்பும்போது அதனை  கையாள்வதில் ஏற்பட்ட சிக்கலால் விபத்து ஏற்பட்டு இருக்குமா அல்லது விபத்திற்கான வேறு ஏதும் காரணங்கள் இருக்குமா என்ற கோணத்தில் அமர்வு நீதிமன்ற காவல் நிலைய  ‌ஆய்வாளர் சேரன் மற்றும் உதவி ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in