வெடித்து சிதறிய பட்டாசு; பறிபோன 8 தொழிலாளர்களின் உயிர்கள்: காஞ்சிபுரத்தில் பயங்கரம்

வெடித்து சிதறிய பட்டாசு
வெடித்து சிதறிய பட்டாசு தரைமட்டமான பட்டாசு ஆலை; பறிபோன 8 தொழிலாளர்களின் உயிர்கள்: காஞ்சிபுரத்தில் பயங்கரம்

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த குருவி மலையில் பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தயாரிக்கும் ஆலையில் சிறிய ரக பட்டாசுகள் மற்றும் வாண வேடிக்கைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணி அளவில் குடோனுக்கு வெளியே காயவைக்கப்பட்டு இருந்த பட்டாசின் மூலப் பொருட்கள் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீ வேகமாக பரவி பட்டாசு தயாரிக்கும் ஆலை குடோன் பகுதிக்கும் பரவியது. இந்த தீ விபத்து நடைபெற்றபோது 25க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்த பட்டாசு குடோனில் பலத்த சத்தத்துடன் சிறிய நில அதிர்வை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர். இதனை அடுத்து பதறி அடித்து அப்பகுதிக்கு ஓடிச் சென்ற மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த 14 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஏழு பேர் பெண்கள் ஆவர். இந்த வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு தொழிற்சாலையில் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in