வீட்டில் பற்றி எரிந்த ஏசி... உதவி கேட்டு ஓடி வந்த மனைவி: உயிரிழந்த மாற்றுத்திறனாளி கணவர்

வீட்டில் பற்றி எரிந்த ஏசி... உதவி கேட்டு ஓடி வந்த மனைவி: உயிரிழந்த மாற்றுத்திறனாளி கணவர்

வீட்டில் ஏசியில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி முதியவர் உடல் கருகி உயிரிழந்தார். மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சென்னை நங்கநல்லூர், 19வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (84). இவர் தனது மனைவி அன்னபூரணியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை பாலசுப்ரமணியம் வீட்டு ஏசியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்து. இவரது வீட்டில் கரும்புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டனர். அப்போது அன்னப்பூரணி வெளியே ஓடிவந்து அக்கம்பக்கத்தினரிடம் உதவி கோரினார். ஆனால் புகை அதிகமானதால் மற்றவர்களால் வீட்டினுள் செல்ல முடியாமல் போனது. உடனே அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து கிண்டியில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தி உள்ளே சென்று பார்த்தபோது பாலசுப்ரமணியம் தீக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாலசுப்பிரமணியத்திற்கு இரண்டு கால்களும் செயலிழந்து போனதால் அவரால் வெளியில் வர முடியாமல் உள்ளேயே சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் பழவந்தாங்கல் போலீஸார் உயிரிழந்த பாலசுப்பிரமணியம் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இத்தீவிபத்து குறித்து பழவந்தாங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி கண்முன்னே கணவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in