அடிபம்பில் இருந்து பீறிட்டுக் கிளம்பிய நெருப்பு: தண்ணீரும் சேர்ந்து வந்ததால் கிராமமக்கள் பீதி

அடிபம்பில் இருந்து பீறிட்டுக் கிளம்பிய நெருப்பு: தண்ணீரும் சேர்ந்து வந்ததால் கிராமமக்கள் பீதி

அடிபம்பிலிருந்து தண்ணீரும், நெருப்பும் பீறிட்டு கிளம்பியதால் மத்திய பிரதேசத்தில் மக்கள் பீதியடைந்தனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் சத்தாப்பூர் மாவட்டத்தில் உள்ள கச்சார் கிராமத்தில் அடிபம்ப் உள்ளது. இந்த அடிபம்பில் இருந்து ஒரே நேரத்தில் தண்ணீரும், நெருப்பும் கொப்பளித்து வெளியேறியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ஒரே நேரத்தில் தண்ணீரும், நெருப்பும் அடிபம்பில் இருந்து வெளியேறியதால் கச்சார் கிராமமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். குழாயில் இருநது ஹைட்ரோ கார்பன் எனப்படும் மீத்தேன் வாயு வெளியேறுவதால் நெருப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in