தங்கும் விடுதியில் பயங்கர தீவிபத்து: 20 அறைகளில் இருந்தவர்கள் நிலை?

தங்கும் விடுதியில் பயங்கர தீவிபத்து:  20 அறைகளில் இருந்தவர்கள் நிலை?

மதுரையில் உள்ள தனியார் உணவு மற்றும் தங்கும் விடுதியில் அதிகாலை 3 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

மதுரை கோ. புதூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது தனியார் உணவு மற்றும் தங்கும் விடுதி. இதன் கீழ் தள ஏசி டைனிங் ஹாலில் இன்று அதிகாலை 3 மணியளவில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

முதல் தளம் வரை தீ மளமளவென பரவியதால் உடனடியாக பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர், தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், 3 தளங்களைக் கொண்ட இந்த உணவகத்தில் சுமார் 20 அறைகள் உள்ளன. இங்கு தங்கியிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

தீயை அணைக்கும் தீயணைப்புத்துறையினர்
தீயை அணைக்கும் தீயணைப்புத்துறையினர்

தீ விபத்தால் ஏற்பட்ட புகையில் அருகில் தங்கி இருந்தவர்களுக்கு லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in