அதிக போக்குவரத்து விதிமீறல் எங்கே தெரியுமா?- 2 நாட்களில் 48.59 லட்சம் அபராதம் வசூல்

அதிக போக்குவரத்து விதிமீறல் எங்கே தெரியுமா?- 2 நாட்களில் 48.59 லட்சம் அபராதம் வசூல்

சென்னையில் கடந்த இரு தினங்களாக நடந்த போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை வசூலிக்கும் சிறப்பு முகாம் மூலம் 4,083 வாகன ஓட்டிகளிடம் இருந்து 48.59 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் வாகன விதிமீறல்களில் ஈடுபட்டு சரியான நேரத்தில் அபராத தொகையை செலுத்தாதவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அபராத தொகை நிலுவை விவரங்கள் போக்குவரத்து போலீஸார் சார்பில் தெரிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 12-ம் தேதி சென்னையில் 10 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, விதிமீறிய 1,022 பேரிடம் அபராத தொகையாக ரூ.11,28,810 வசூலிக்கப்பட்டது. மேலும் , நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்கும் பொருட்டு கடந்த 19 மற்றும் 20-ம் தேதிகளில் சென்னையில் 168 இடங்களில் சிறப்பு வாகன சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டன.

இந்த முகாமில் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களிடம் இருந்து நிலுவையில் உள்ள அபராத தொகையை கடன் அட்டை, க்யூஆர் குறியீடு, இணையதள கட்டணம் ஆகியவை மூலம் அபராதத் தொகை செலுத்த ஊக்கப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தினங்களாக நடைபெற்ற சிறப்பு முகாம் மூலமாக விதிமீறலில் ஈடுபட்ட 4,083 வாகன ஓட்டிகளிடம் 48,59,300 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. துரைப்பாக்கம், மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தினர் அதிகபட்ச அபராதத் தொகையை வசூலித்துள்ளதாக அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in