கல்லூரிக் கட்டணம் செலுத்த பணமில்லை; உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி: குமரியில் நடந்த சோகம்

கல்லூரிக் கட்டணம் செலுத்த பணமில்லை; உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி: குமரியில் நடந்த சோகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த இறுதியாண்டு மாணவி தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், அந்தரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் சுபிதா கிரேஸ்(21). இவர் திடல் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக சுபிதா கிரேஸ் கல்லூரிக்குச் செல்லவில்லை. இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார் சுபிதா கிரேஸ். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பூதப்பாண்டி போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சுபிதா கிரேஸ் கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்ததும். தொடர்ந்து இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in