போதை ஏறி போச்சு, புத்தி மாறிப்போச்சு: நடுரோட்டில் கொலைவெறியோடு மோதிக்கொண்ட டிரைவர்கள்

கட்டி உருண்டு சண்டை போட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்.
கட்டி உருண்டு சண்டை போட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்.

ஆட்டோ டிரைவர்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பேருந்து நிலையம் எதிரே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், இரு ஆட்டோ ஓட்டுநர்கள் குடி போதையில் அரை நிர்வாணமாக ஒருவரையொருவர் நேற்று தாக்கிக்கொண்டனர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்மைநாயக்கனூர் காவல் துறையினர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சண்டையில் ஈடுபட்டது பொம்மனம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சண்முகராஜா என்பதும் உச்சணம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டி என்பதும் தெரியவந்தது. மேலும், இருவரும் போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறியுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற இந்த ஆட்டோ ஸ்டாண்டில் குடிபோதையில் அடிக்கடி ஆட்டோ டிரைவர்கள் இதுபோன்று சண்டை போடுவதால், இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும், இந்த ஆட்டோ ஸ்டாண்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் தாங்கிக்கொள்ளும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in