தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: தொண்டை வலி, உடல் சோர்வால் மக்கள் பாதிப்பு

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறதுதமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: தொண்டை வலி, உடல் சோர்வால் மக்கள் பாதிப்பு

தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் மக்களுக்கு தொண்டை வலி,  உடல் சோர்வுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் துவங்கும் நேரத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் விஷக் காய்ச்சல்கள் பரவுவது அதிகரித்துள்ளது.  சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல்கள் தமிழகத்தில் பரவி ஏராளமான உயிர்களை பலி வாங்கியது.  லட்சக்கணக்கானோர் அந்த காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 2019-ல்  கொரோனா பரவியது. அதற்கு பல ஆயிரக்கணக்கானவர்கள்  பலியானார்கள். மத்திய, மாநில அரசுகள்  போராடி மக்கள் ஒத்துழைப்புடன் இரண்டு ஆண்டுகள் கடந்தபின் அதனை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த சில மாதங்களாகத்தான் நாட்டில் இயல்பு நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் விஷக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் பரவிவரும் இந்த வைரஸ் காய்ச்சல் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு வந்து விட்டால் அப்படியே ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்றி விடுகிறது. ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் காய்ச்சலால் அவதிப்பட்டு,  படாத பாடுபட்டு வருகிறார்கள்.  இந்த காய்ச்சலால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  கூட்டம் நிரம்பி வழிகிறது.

ஆனாலும் இந்த காய்ச்சல் அச்சுறுத்தும் அளவிற்கு செல்லவில்லை.  இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் தரும் மருந்து மாத்திரைகளால்  குணமாகி விடுகிறார்கள்.  தனியார் மருத்துவமனையிலும் இதற்கு போதுமான  குறைந்த அளவிலான சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளிகள் குணமாக்கப்படுகிறார்கள். இதனால் உயிர் ஆபத்துகள் இல்லை.  ஆனால், நான்கு நாட்களுக்கு தொண்டை வலி,  உடல் சோர்வு போன்ற உபத்திரங்கள் பாடாய்படுத்தி எடுத்து விடுகின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதே இந்தக்  காய்ச்சல் வேகமாக பரவுவதற்கு காரணம் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in