நெல்லையப்பர், செப்பறை அழகிய கூத்தர் கோயில்களில் திருவிழா கொடியேற்றம்!

நெல்லையப்பர், செப்பறை அழகிய கூத்தர் கோயில்களில் திருவிழா கொடியேற்றம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயில் மற்றும் செப்பறை அழகிய கூத்தர் ஆலயங்களில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்று நெல்லையப்பர் ஆலயம். இதனாலேயே இந்த ஊருக்கு நெல்லை எனப் பெயர் வந்தது. அந்த அளவிற்கு பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயிலில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிர சபையும் அமைந்துள்ளது. நெல்லையர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவின் போது பெரிய சபாபதி சன்னதியில் திருவென்பாவை பாடல் பாடப்பட்டு சிறப்புப் பூஜைகளும் நடைபெறும். இந்நிகழ்வில் 5-ம் தேதி, நள்ளிரவு தாமரை சபா மண்டபத்தில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அதிகாலை 2 மணிக்கு கோபூஜையும், 3 மணிக்கு ஆருத்ரா தரிசன நிகழ்வும் நடக்கிறது.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற ராஜவல்லிபுரம் செப்பறை அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோயிலில் மார்கழித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in