லாரியிலிருந்து அறுந்துவிழுந்த கயிறு: கழுத்தில் மாட்டி தூக்கி வீசப்பட்ட வாலிபர்: பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

லாரியிலிருந்து அறுந்துவிழுந்த கயிறு: கழுத்தில் மாட்டி தூக்கி வீசப்பட்ட வாலிபர்: பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் உரமூட்டையுடன் சென்ற லாரியில் இருந்து கயிறு கீழே விழுந்து எதிரே பைக்கில் சென்ற வாலிபரின் கழுத்தைச் சுற்றியது. இதில் டூவீலரில் இருந்து தூக்கி வீசப்பட்டவர் அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் விவசாய உரங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் உர மூட்டைகள் கயிறுகொண்டு இறுக்கமாகக் கட்டப்பட்டு இருந்தது. ஏரல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென இந்த கயிறு, உரமூட்டையுடன் அவிழ்ந்து கீழே விழுந்தது. அப்போது எதிரே டூவீலரில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டு இருந்தார். அப்போது உரமூட்டையுடன் கீழே விழுந்த இந்தக் கயிறு அந்த வாலிபரின் கழுத்தில் பற்றி சுற்றியது. இதில் நொடிப்பொழுதில் அந்த இளைஞர் கண்ணி போட்டு வேட்டையாடியதைப் போல் தூக்கி வீசப்பட்டார்.

அதிர்ஷ்டவசமாக இதில் பெரிய அளவில் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. இருந்தும் பைக்கில் இயல்பாகச் சென்று கொண்டிருந்தவர் ஒரு நொடியில் தூக்கி வீசப்பட்ட நெஞ்சை பத, பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in