தூக்கில் தொங்கிய பெண் மருந்தாளுநர்... வீடுதிரும்பிய கணவர் அதிர்ச்சி: சிக்கியது 4 பக்க கடிதம்!

தூக்கில் தொங்கிய பெண் மருந்தாளுநர்... வீடுதிரும்பிய கணவர் அதிர்ச்சி: சிக்கியது 4 பக்க கடிதம்!

குளச்சல் அருகே பெண் மருந்தாளுர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4 பக்க கடிதத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள காரியாவிளையைச் சேர்ந்தவர் அருண்குமார்- ஷகீலா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தனியார் மருத்துவமனையில் மருந்தாளுநராக ஷகீலா பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வேலை முடித்து வீடு திரும்பிய கணவர் அருண்குமார், மனைவி ஷகீலா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குளச்சல் காவல்துறையினர், ஷகீலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறையினர், ஷகீலா வீட்டிலிருந்து அவர் எழுதிய 4 பக்க கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து கணவரிடமும் உறவினர்களிடமும் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருந்தாளுர் தற்கொலை செய்து கொண்டு உள்ள சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in