வாட்ஸ் அப்பில் வந்த குரல் மெசேஜ்... சகோதரி வருவதற்குள் உயிரை மாய்த்த தங்கை: மாமியாரால் நடந்த விபரீதம்

வாட்ஸ் அப்பில் வந்த குரல் மெசேஜ்... சகோதரி வருவதற்குள் உயிரை மாய்த்த தங்கை: மாமியாரால் நடந்த விபரீதம்

திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில், மாமியாரின் கொடுமை தாங்க முடியாமல் கர்ப்பிணி மருமகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

குமரன்- இந்துமதி
குமரன்- இந்துமதி

சென்னை தி.நகரைச் சேர்ந்த குமரனுக்கும், வேளச்சேரியைச் சேர்ந்த இந்துமதிக்கும் திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் ஆகியுள்ளது. இந்நிலையில், மாமியாருக்கும், மருமகள் இந்துமதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார் இந்துமதி. ஆனால், கணவரும் இந்துமதியை வந்துபார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கர்ப்பிணியாக இருந்த இந்துமதி விரக்தியில் இருந்துள்ளார்.

இந்துமதியின் மாமியார்
இந்துமதியின் மாமியார்

இந்நிலையில், `எனது சாவுக்கு மாமியார் காரணம்' என்று வாட்ஸ் அப்பில் குரல் பதிவை தனது சகோதரிக்கு அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரி, விரைந்து வந்துள்ளார். வீட்டிற்கு வருவதற்குள் இந்துமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இந்துமதியின் மாமியார் மீது புகார் அளிக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட இந்துமதியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி ஐந்து மாதங்களே ஆகியுள்ளதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in