காவல்நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் கைதி: போலீஸார் அதிர்ச்சி

காவல்நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் கைதி: போலீஸார் அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை காவல்நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் கைதியால் பரபரப்பு ஏற்பட்டது.

குமரிமாவட்டம், முளகுமூடு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமாரி. இவர் தக்கலை பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு பெண் அவர் கழுத்தில் கிடந்த செயினைப் பறிக்கமுயன்றார். சாந்தகுமாரி நகையைத் திருடவிடாமல் தடுத்ததோடு, நகை திருட வந்த பெண்ணையும் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார்.

இதையடுத்து தக்கலை போலீஸார், பிடிபட்ட பெண்ணிடம் தொடர்ந்து விசாரித்ததில் அவர் கேரள மாநிலம், மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த செந்தில் மனைவி கவிதா(35) என்பது தெரியவந்தது.

போலீஸார் தொடர்ந்து விசாரித்ததில் அவர் பல ஊர்களிலும் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையின் போது கவிதா தனக்கு சிறுநீர் வருவதாகச் சொன்னார். போலீஸார் காவல்நிலைய கழிப்பறையை பயன்படுத்தக் காட்டினர். அப்போது கவிதா அங்கிருந்த பினாயிலை எடுத்துக்குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே போலீஸார் அவரை தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்து திரும்பியதும் போலீஸார் கவிதாவை, தக்கலை பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in