ஓடும் ரயிலில் சரமாரியாக கத்திக்குத்து; ரத்த வெள்ளத்தில் சரிந்த பெண் காவலர்: வாலிபர் வெறிச்செயல்

ஓடும் ரயிலில் சரமாரியாக கத்திக்குத்து; ரத்த வெள்ளத்தில் சரிந்த பெண் காவலர்: வாலிபர் வெறிச்செயல்

சென்னையில் மின்சார ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரை வாலிபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கடற்கரை, சென்ட்ரல் மார்க்கமாக செங்கல்பட்டு, அரக்கோணத்துக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்த பயணத்தின் போது பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் இருக்கும் பெட்டியில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். குடிமன்னர்களின் தொந்தரவு அதிகமாக இருப்பதால் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இன்று அதிகாலையில் மின்சார ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் புறப்படும் நேரத்தில் பெண்கள் பெட்டியில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் ஏறியுள்ளார். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஆசிர்வா, இது பெண்கள் பெட்டி. இந்தப் பெட்டியில் பயணிக்கக்கூடாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண் காவலரை சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் பெண் காவலர் சரிந்து விழுந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவலர்கள், பெண் காவலரை உடனடியாக பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பெண் காவலரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஓடும் மின்சார ரயிலில் பெண் காவலர் ஒருவர் போதை ஆசாமியால் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in