கத்திக்குத்துக் காயங்களுடன் தப்பியோடும் பெண் காவலர்: சென்னையில் வைரலாகும் வீடியோ

கத்திக்குத்துக் காயங்களுடன் தப்பியோடும் பெண் காவலர்: சென்னையில் வைரலாகும் வீடியோ

சென்னையில் கத்திக்குத்து காயங்களுடன் பெண் காவலர் ரயிலி்ல் இருந்து இறங்கி ஓடிவரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் மேடவாக்கம் டேங்க் ரோட்டைச் சேர்ந்தவர் ஆஷீர்வா(29). ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலரான இவர் கடந்த 23-ம் தேதி இரவு கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

ஆஷீர்வா
ஆஷீர்வா

அப்போது கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து ரயில் கிளம்பிய உடன் பெண்கள் பெட்டியில் 40 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏறியுள்ளார்.

இதனைக் கண்ட பெண் காவலர் ஆஷீர்வா, அந்த நபரை கீழே இறங்கும்படி கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென அந்த நபர் கையில் வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து பெண் காவலரின் நெஞ்சு மற்றும் கழுத்துப் பகுதிகளில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த பெண் காவலர் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பித்து ஓடினார்.

இது குறித்து தகவலறிந்த எழும்பூர் ரயில்வே போலீஸார், காயமடைந்த பெண் காவலரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் எழும்பூர் ரயில்வே போலீஸார், இச்சம்பவம் குறித்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கத்தியால குத்திய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த பெண் காவலர் ஆஷீர்வா ரயிலில் இருந்து தப்பித்து ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in