`அச்சமாக இருந்ததால் புகார் அளிக்கவில்லை'- சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பெண் போலீஸ் சாட்சியம்

`அச்சமாக இருந்ததால் புகார் அளிக்கவில்லை'- சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பெண் போலீஸ் சாட்சியம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பெண் தலைமை காவலரிடம் 4-வது நாளாக குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2 ஆண்டுக்கு முன்பு விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு காவலர்களால் தாக்கப்பட்டனர். இதனால் இருவரும் அடித்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சம்பவம் நடைபெற்ற போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ரைட்டராக பணிபுரிந்த பியூலா செல்வகுமாரி (தற்போது கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிகிறார்) சாட்சி அளிக்கையில், ஜெயராஜ், பென்னிக்ஸை போலீஸார் அடித்து சித்ரவதை செய்ததாக கூறினார்.

பியூலா செல்வகுமாரியிடம் 3 நாட்களாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் இன்று 4-வது நாளாக குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக அவர் நீதிபதி நாகலெட்சுமி முன்பு ஆஜரானார்.

சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் வெயிலுமுத்து சார்பில் வழக்கறிஞர்கள் பியூலாவிடம் குறுக்கு விசாரணை நடத்தினர். அவர்கள், காவல் நிலையத்தில் தந்தை, மகன்கள் போலீஸாரால் தாக்கப்பட்டது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஏன் உடனடியாக புகார் அளிக்கவில்லை? என பியூலாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தந்தை, மகனை தாக்கியவர்கள் உயர் அதிகாரிகள் என்பதால் புகார் அளிக்க அச்சமாக இருந்தது. இதனால் உடனடியாக புகார் அளிக்கவில்லை என்றார். இதையடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in