செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்; திடீரென ரயிலில் பாய்ந்து பெண் வழக்கறிஞர் தற்கொலை: பதறிய பயணிகள்

செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்; திடீரென ரயிலில் பாய்ந்து பெண் வழக்கறிஞர் தற்கொலை: பதறிய பயணிகள்

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இளம்பெண் வழக்கறிஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம், மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹேமாவதி(28). வழக்கறிஞரான இவர் இன்று காலை 11.45 மணியளவில் பூங்கா ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு செல்போனில் பேசி கொண்டிருந்த ஹேமாவதி திடீரென அவ்வழியாக செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனே இது குறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அங்கு வந்த ரயில்வே போலீஸார், ஹேமாவதி உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த எழும்பூர் ரயில்வே போலீஸார், வழக்கறிஞர் ஹேமாவதி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதுடன் அவர் கடைசியாக செல்போனில் பேசிய எண்ணை வைத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இளம்பெண் வழக்கறிஞர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in