உசிலம்பட்டியில் பெண் சிசுக்கொலையா?: போலீஸார் தீவிர விசாரணை

உசிலம்பட்டியில் பெண் சிசுக்கொலையா?: போலீஸார் தீவிர விசாரணை

உசிலம்பட்டியில் பிறந்து 80 நாளான பெண் சிசு உயிரிழந்தது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது கோவிலாங்குளம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சிவராஜா. இவரது மனைவி கருப்பாயி. இவர்களுக்கு ஏற்கெனவே ஐந்து மற்றும் மூன்று வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 80 நாட்களுக்கு முன்பு கருப்பாயிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக்குழந்தை பிறந்தது. இதனிடையே பெண் சிசுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 18-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று நள்ளிரவு பெண் குழந்தை உயிரிழந்தது. பால் குடிக்க முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பெண் சிசு இயற்கையாக இறந்ததா அல்லது கொலை செய்யப்பட்டதா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in