சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவில் டெல்டா, தென் கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

சுட்டெரிக்கும்  வெயிலுக்கு நடுவில் டெல்டா, தென் கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சூரியன் சுட்டெரிக்கிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 25, 26 ஆகிய தேதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே  நிலவக்கூடும். ஆனால் 27, 28 தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலும் மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்' என்று கூறப்பட்டுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in