போதை மருந்து வாங்க பணம் தரமறுத்த தந்தை: அடித்துக் கொலை செய்த மகன் கைது

தந்தையை கொலை செய்த மகன்.
தந்தையை கொலை செய்த மகன்.போதை மருந்து வாங்க பணம் தரமறுத்த தந்தை: அடித்துக் கொலை செய்த மகன் கைது

போதை மருந்து வாங்க பணம் தரமறுத்த தந்தையை அடித்துக் கொன்ற வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லி சுபாஷ் பிளேஸில் இருவருக்குத் தகராறு நடப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கே சென்ற போது முதியவர் ஒருவர் காதில் ரத்தம் வடிய மயங்கிக் கிடந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது, பலியானவர் ஷகுர்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பது தெரிய வந்தது. வடமேற்கு டெல்லியின் சுபாஷ் பிளேஸில் அவருக்கும், அவரது மகன் அஜய்க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. போதைப்பழக்கத்திற்கு அடிமையான அஜய், போதை மருந்து வாங்க பணம் கேட்டு சுரேஷ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால், சுரேஷ்குமார் பணம் தரமறுத்துள்ளார். இந்த ஆத்திரத்தில் அஜய் அவரை அடித்துக்கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து அஜய் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் இன்று கைது செய்தனர். போதை மருந்து வாங்க பணம் தரமறுத்த தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in