14 வயது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த தந்தை: 22 ஆண்டு சிறைத்தண்டனை அறிவித்த மகளிர் கோர்ட்

வெங்கடாசலம்
வெங்கடாசலம்

பழநியில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  

திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (எ) வெங்கடாசலம் (36). சில ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை வெங்கடாசலம் 2வது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், அப்பெண்ணின் 14 வயது மகளை கடந்த 2019-ம் ஆண்டு வெங்கடாசலம பாலியல் வன்கொடுமை செய்தாக புகார் எழுந்தது.

இதையடுத்து சிறுமியின் தாய், போலீஸில் புகாரளித்தார். இதன்பேரில், பழநி மகளிர் போலீஸார், வெங்கடாசலம் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வந்தது.

இதில், குற்றவாளி வெங்கடாசலத்திற்கு 22 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in