40 வயது மகனை கொன்ற 80 வயது தந்தை: தினமும் குடித்துவிட்டு தொந்தரவு செய்ததால் வெறிச்செயல்

கொலை
கொலை

கன்னியாகுமரி மாவட்டம், இரணியலில் குடிபோதையில் தினமும் இரவு வீட்டுக்கு வந்து தகராறு செய்த மகனை தந்தை கோடரியால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பாளையம் சரல்விளை பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (80). இவரது மனைவி இறந்துவிட்டார். இவருக்கு 6 பிள்ளைகள் உள்ளனர். இதில் நான்குபேருக்கு திருமணம் முடிந்துவிட்டது. இருமகன்களுக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. இதில் ஒரு மகன் தனியாக வசிக்கும் நிலையில், இன்னொரு மகனான நாகராஜன் (40) என்பவர், தன் தந்தை சவுந்தர பாண்டியனுடன் வசித்து வந்தார்.

நாகராஜன் கட்டிட வேலை செய்து வந்தார். தீவிர குடிப்பழக்கம் கொண்ட இவர், தினமும் குடித்துவிட்டுவந்து, தன் தந்தை சவுந்தரபாண்டியனிடம் தகராறு செய்வார். நேற்றும் வழக்கம் போல் இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் தன் தந்தையிடம் தகராறு செய்தார். கூடவே தன் வீட்டில் இருந்த பொருள்களையும் நாகராஜன் எடுத்து சேதப்படுத்தினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சவுந்தரபாண்டியன் தன் வீட்டில் இருந்த கோடரியால் மகன் நாகராஜனை வெட்டிக் கொலை செய்தார். தொடர்ந்து சவுந்திரபாண்டியனே இரணியல் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இரணியல் போலீஸார், நாகராஜனின் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in